தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம்
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கையெழுத்து இயக்கத்தை ஈ.ஆர்.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு,
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்படி ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதியின் சிலை வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டணி கட்சிகள்
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்ல பொன்னி, பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, பகுதி செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மண்டல தலைவர் ஜாபர்சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாட்சா, கொ.ம.தே.க. இளைஞர் அணி தலைவர் சூரியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தி.மு.க.வினர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த கையெழுத்து இயக்கம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
இதேபோல் பவானி, சத்தியமங்கலம் பகுதியிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Related Tags :
Next Story