குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 8-வது நாளாக பெண்கள் தொடர் போராட்டம்
நாக்பாடாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை நாக்பாடாவில் உள்ள மோர்லண்டு ரோட்டில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை திடீரென ஒரு சில போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட ஒத்து கொள்ளவில்லை. இதனால் போராட்ட களத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்த தகவல் வேகமாக பரவியது. இதனால் போராட்டத்தில் ஈடுபட அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் அங்கு திரண்டு வந்து குவிந்தனர். இதனால் சுமார் 100 பேர் இருந்த போராட்ட களம் 1,000 பேரை தொட்டது.
இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை கைவிடும் முடிவை கைவிட்டனர். நேற்று 8-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெண்களின் போராட்டம் நீடித்தது.

Related Tags :
Next Story