அண்ணா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


அண்ணா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2020 3:45 AM IST (Updated: 3 Feb 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

அண்ணாவின் நினைவு தினம் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஒதியஞ்சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அமைச்சர் நமச்சிவாயம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க.வினர் உப்பளம் தலைமை கழகத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் ராமதாஸ், மகாதேவி, திருநாவுக்கரசு, துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, வக்கீல்கள் பிரிவு செயலாளர் குணசேகரன், மீனவர் அணி செயலாளர் ஞானவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தெற்கு மாநில தி.மு.க.வினர் சுதேசி மில் அருகிலிருந்து மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் அனிபால்கென்னடி, அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், நிர்வாகிகள் தைரியநாதன், சந்திரேஷ்குமார், வேலன், மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாநில தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பலராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், லோகையன், பொருளாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சுப்ரமணியன், யூ.சி.ஆறுமுகம், சுகுணா செல்லப்பன், எஸ்.டி.சேகர், ராஜா, பிற அணி செயலாளர்கள் தமிழ்செல்வன், காமாட்சி, பாஸ்கர், மணிகண்டன், பிரேமா, உபைதுர் ரகுமான், தொகுதி செயலாளர்கள் முருகன், பாலமுருகன், சுரேஷ், ரத்தினகுமார், சிராஜ், செந்தில், தெய்வநாயகம், சரவணன், சலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொன்.நடராஜன், தேவநாதன், கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத்தினர் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story