திருவாரூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 1 மணிநேரம் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர்
திருவாரூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1 மணிநேரம் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
மத்திய அரசு தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்ட தொடரில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் ஆகியோர் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் நித்திஷ் சண்முகசுந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் கமலவடிவேல் முன்னிலை வகித்தார். இதில் லிக்காய் முகவர் சங்க பொறுப்பாளர் நாகராஜன், கிழக்கு கோட்ட செயலாளர் கருணாநிதி, காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகி பூங்குன்றன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story