நெல்லையில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நேற்று தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பெருமாள், ஜோதி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி செல்வம், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி மாடசாமி, எச்.எம்.எஸ். நிர்வாகி மைக்கேல் ராஜ், பணியாளர் சம்மேளனம் சந்தானம், உத்திரம் மற்றும் சுப்பிரமணியன், கண்ணன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மண்டலத்தில் உள்ள 16 அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story