ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது


ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 5 Feb 2020 12:15 PM IST (Updated: 5 Feb 2020 12:14 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம்,

சேலம் அரிசிபாளையம் தம்மன்னசெட்டிரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானு (44). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சங்கர் (34) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையொட்டி இருவரும் தனிமையில் சந்தித்து வந்து உள்ளனர். இதை அறிந்த அண்ணாதுரை மனைவியை கண்டித்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கர், பானு இருவரும்வீட்டில்தனியாக இருந்து உள்ளனர். அப்போது வெளியில் இருந்து வீட்டுக்குவந்த அண்ணாதுரைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர்களை தாக்க முயன்று உள்ளார். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பானு, கணவரைதாக்கி,கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகஅண்ணாதுரை சத்தம் போட்டு உள்ளார். இதனால் பயந்து போன சங்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து அண்ணாதுரை செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானு அவரது கள்ளக்காதலன் சங்கர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story