பாளையங்கோட்டையில் 2-வது நாளாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் 2-வது நாளாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:45 AM IST (Updated: 6 Feb 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நேற்று 2-வது நாளாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

எல்.ஐ.சி. பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கோட்ட நலச்சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு நேற்று மதியம் உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்ட பொதுச்செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தென்மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் முருகன், அலுவலக செயலாளர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார்.

அகில இந்திய செயலாளர் ராம்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சி. பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு ஏன் விற்பனை செய்ய வேண்டும். இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்.சி.- எஸ்.டி.க்கான இட ஒதுக்கீட்டினை பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளான எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story