கள்ளக்குறிச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் - கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கத்தை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கள்ளக்குறிச்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், முத்தமிழ்கண்ணன், வீரமுத்து, கெங்காசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் அவர் கையெழுத்து வாங்கினார்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவல்லபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன், மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்னம், முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், இளையராஜா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜமோகன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தனபால், தி.மு.க. நகர செயலாளர் சுப்ராயலு, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் இளவரசன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story