பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் கலெக்டர் அருண் தகவல்
வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுவை யூனியன் பிரதேசத்தில் 1-1-2020-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 25 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கலெக்டர் அருண் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், தொகுதி செயலாளர் நடராஜன், அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்துவான் சூசை, பா.ஜனதா மாநில செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் கீதநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன், பா.ம.க. துணைத்தலைவர் சத்தியநாராயணன், பகுஜன் சமாஜ்கட்சி பொதுச்செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாவட்டத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 860 ஆண்கள், 4 லட்சத்து 32 ஆயிரத்து 121 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 82 பேர் என மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 63 பேர் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story