இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2020 9:45 PM GMT (Updated: 8 Feb 2020 3:15 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை,

மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட தலைமையிட செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சாமுவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் சங்கர் கலந்து கொண்டு பேசினார். இதில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் உள்ளதால் உடனே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Next Story