வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி; தேர்தல் ஆணைய பார்வையாளர் ஆய்வு
வாலாஜா அருகே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணைய பார்வையாளர் ஆய்வு செய்தார்.
வாலாஜா,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தின் கீழ் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்காக பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பணிகளை வாக்காளர் பட்டியலுக்கான தேர்தல் ஆணைய பார்வையாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசண்முகராஜா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாலாஜா தாலுகாவில் கடப்பேரி, சென்னசமுத்திரம், நெமிலி தாலுகாவில் கொண்டாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விசாரணை பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தேர்தல் தாசில்தார்கள் விஜயகுமார், ஸ்ரீராம், நெமிலி, வாலாஜா தாசில்தார்கள் பாக்கியநாதன், பாலாஜி, நெமிலி, வாலாஜா தாலுகாக்களுக்கான தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story