மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் வேதனை + "||" + Farmers agonize over paddy purchasing stop for 3 days near Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையில் கழுக்காணிமுட்டம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் திருவிழந்தூர், ஆனதாண்டவபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு எடுத்து செல்ல லாரிகள் வரவில்லை. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலைய வளாகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளது.

நடவடிக்கை

மிகக்குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த கொள்முதல் நிலையத்தில் மேலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க இடமில்லாத காரணத்தால், தொடர்ந்து நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்த நெல்லை மூட்டைகளில் நிரப்பி வயலின் களத்துமேட்டிலேயே வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர். இதனால் திடீரென மழை பெய்தால் மழைநீரில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் உள்ளது.

எனவே மேற்கண்ட நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் எடுத்து செல்ல வேண்டும் என்றும், தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்யவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிப்பு டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம்
கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.
2. பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி காய்ந்த வாழை மரங்களுடன் விவசாயிகள் ஊர்வலம்
தொட்டியம் பகுதி பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் திருச்சி-நாமக்கல் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க ஆடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க ஆடுகள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணை வேந்தர் பாலசந்திரன் கூறினார்.
4. கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
5. சேலம் விமான நிலைய விரிவாக்கம்: நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.