வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி மதபோதகரை ஏமாற்றி ரூ.48 லட்சம் மோசடி
வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி மதபோதகரை ஏமாற்றி ரூ.48 லட்சம் மோசடி இடைத்தரகர் கைது.
திரு.வி.க. நகர்,
சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 46). இவர் கிறிஸ்தவ மதபோதகராக உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அவரது பூர்வீக வீட்டை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் கடன் வாங்க மயிலாப்பூரைச் சேர்ந்த இடைத்தரகரான லோகநாதன் (53) என்பவரை அணுகியுள்ளார். இதையடுத்து லோகநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் வாங்கி தருவதாக வின்சென்டிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், லோகநாதன் கடந்த 2017-ம் ஆண்டு அந்த வீட்டை வின்சென்ட்டுக்கு தெரியாமல் வேறொரு நபருக்கு ரூ.48 லட்சத்துக்கு விற்றுள்ளார்.
இது குறித்து வின்சென்ட் லோகநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது ரூ.5 லட்சத்தை மட்டும் வின்சென்டிடம் கொடுத்த லோகநாதன் மீதி பணத்தை தருவதாக கூறி நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பணமோசடி செய்ததாக லோகநாதன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலுவலகத்தில் வின்சென்ட் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு துணை கமிஷனர் மனோகரன் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், இடைத்தரகரான லோகநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story