மாவட்ட செய்திகள்

செங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி + "||" + Awareness Marathon Competition at Red Fort

செங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

செங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
செங்கோட்டையில் காவல் துறை மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
செங்கோட்டை,

செங்கோட்டையில் காவல் துறை மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர் கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து விபத்தில்லா தமிழகம் உருவாக்க வேண்டியும், பொதுமக்களிடையே நட்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டிரஸர்ஐலண்ட் பள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
4. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.
5. சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.