மாவட்ட செய்திகள்

ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் தெப்பத்திருவிழா + "||" + Alapparkurichi Sivasailanathar Temple Theppattru festival

ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் தெப்பத்திருவிழா

ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் தெப்பத்திருவிழா
ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
கடையம்,

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் கோவிலில் 26-ம் ஆண்டு தெப்ப திருவிழா கடந்த 30-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 7-ந் தேதி சிவசைலத்தில் இருந்து சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி திருக்குளம் விநாயகர் கோவிலுக்கு எழுந்தருளினர். நேற்று முன்தினம் காலை விளா பூஜை அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து சுவாமி-அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனமடத்தில் இறங்கினர். 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயராட்சை பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பத்தில் 11 சுற்றுகள் வலம் வந்தனர். இதில் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் திருக்குளம் வீதிஉலா சென்று பெரிய தளவாய் மாடசாமிக்கு காட்சியளித்ததும், நேற்று காலை தருமபுரம் ஆதீனமடத்தில் இறங்கினர்.


ரிஷப வாகனத்தில் வீதி உலா

தொடர்ந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளி கோவில் சேர்ந்தபின் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் முருகன், செயல் அலுவலர் தேவி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
3. தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம்
தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4. கோவில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? - வானதி சீனிவாசன் விளக்கம்
கோவில்களை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்துவது ஏன்? என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
5. இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.