‘வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துங்கள்’ பொதுமக்களுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது ஒவ்வொரு வீடுகளிலும் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் மற்றும் ஏ.வி.எம். நலசங்கம் இணைந்து ஆதனூர் மற்றும் கிராமத்தை சுற்றியுள்ள 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் திறப்பு விழா ஏ.வி.எம்.நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமை தாங்கி, 24 இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பேசியதாவது:-
குற்றச்சம்பவங்களை தடுப் பதற்கு போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், மேலும் பொதுமக்கள் தங்களது ஒவ்வொரு வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
குடியிருப்புவாசிகள் வெளியூர் செல்லும் போது வீடுகளில் அதிக நகை, பணம் ஆகியவற்றை வைத்து விட்டு போக கூடாது. பாதுகாப்பாக வங்கி பெட்டகத்தில் நகை, பணத்தை வைக்கவேண்டும். மேலும் வீடுகளை பூட்டி விட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
உங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உங்களை பின்தொடர்ந்து வந்தால் உடனடியாக காவலன் செல்போன் செயலி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக அப்பகுதிக்கு போலீசார் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழா மேடையில் காவலன் செல்போன் செயலி பற்றியும், பொதுமக்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், ஏ.வி.எம்.நகர் நலசங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story