மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 131 பயனாளிகளுக்கு ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவி


மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 131 பயனாளிகளுக்கு ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 8:24 PM GMT)

மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 131 பயனாளிகளுக்கு ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்னா வழங்கினார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வஞ்சினபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 910 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முகாமில், வேளாண்மைத்துறை, கால் நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

முகாமில், திட்ட இயக்குனர்கள் சுந்தரராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தேன்மொழி சாமிதுரை, ஒன்றிய வார்டு உறுப்பினர் கலா குருசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலை) அன்புராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாவித்திரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story