அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு


அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Feb 2020 3:00 AM IST (Updated: 14 Feb 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story