8 சட்டமன்ற தொகுதிகளில் 19,25,940 வாக்காளர்கள்; இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


8 சட்டமன்ற தொகுதிகளில் 19,25,940 வாக்காளர்கள்; இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 3:21 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வெளியிட்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 940 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கலந்து கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இறுதி வாக்காளர் பட்டியல்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 875 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 12 பேரும், முன்னாள் படைவீரர்கள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 34 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 580 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 265 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 28 பேரும், முன்னாள் படை வீரர்கள் 41 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 150 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 17 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேரும், முன்னாள் படைவீரர்கள் 33 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 922 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 4 பேரும், முன்னாள் படைவீரர்கள் 15 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்கள் உள்ளனர்.

பவானி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 143 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 99 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 7 பேரும், முன்னாள் படைவீரர்கள் 53 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 302 வாக்காளர்கள் உள்ளனர். அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 449 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 117 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 11 பேரும், முன்னாள் படைவீரர்கள் 61 பேரும் என ெமாத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 99 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 609 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும், முன்னாள் படைவீரர்கள் 26 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளன. பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 491 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 5 பேரும், முன்னாள் படைவீரர்கள் 20 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 946 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 84 ஆயிரத்து 395 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 94 பேரும், முன்னாள் படைவீரர்கள் 272 பேரும் என மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 940 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட இறுதி வாக்காளர் பட்டியலில் 36 ஆயிரத்து 591 பேர் கூடுதலாக உள்ளனர். 6 ஆயிரத்து 601 வாக்காளர்கள் பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பட்டியலில் 42 ஆயிரத்து 920 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் படைவீரர்கள் 272 பேர் உள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது. வழக்கம்போல் மாவட்டத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண்களை விட 43 ஆயிரத்து 216 கூடுதலாக உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும் www.election.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலும், 1950 என்ற இந்திய தேர்தல் ஆணைய இலவச தொலைபேசி எண் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story