மாவட்ட செய்திகள்

சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு + "||" + In a sealed rice mill Theft of Rs.10 lakhs machines - 2 people sued, including owner

சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர் திருடிச்சென்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் பாண்டி. இவர் அப்பகுதியில் நவீன அரிசி ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையை நவீனப்படுத்துவதற்காக பாண்டி காரைக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், இந்த அரிசி ஆலையை அடமானமாக வைத்து ரூ.1 கோடி கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடனையோ, வட்டியையோ பாண்டி முறையாக வங்கிக்கு செலுத்தவில்லை. இதனால் வங்கி நிர்வாகம், கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்தி அரிசி ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் பாண்டி கடனை திரும்ப செலுத்தவில்லை.

இதனால் வங்கி நிர்வாகம் அரிசி ஆலைக்கு சீல் வைத்தது. இந்த நிலையில் பாண்டியும், தேவகோட்டையை சேர்ந்த அவரது நண்பர் கண்ணனும் சேர்ந்து அரிசி ஆலையின் சுவற்றை உடைத்து, உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வங்கி முதன்மை மேலாளர் அன்வர் சதாத், பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின்பேரில், அரிசி ஆலை உரிமையாளர் பாண்டி, கண்ணன் ஆகியோர் மீது பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோ.பூவனூர் வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலம் அருகே கோ. பூவனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விழுப்புரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3. சேலத்தில், கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு - தந்தை, மகன் கைது
சேலத்தில் கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
4. எசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எசனை கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.