மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பெண்களே அதிகம்


மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பெண்களே அதிகம்
x
தினத்தந்தி 15 Feb 2020 3:30 AM IST (Updated: 15 Feb 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

கரூர்,

இந்திய தேர்தல் ஆணையத் தின் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக் குறிச்சி, கரூர், கிருஷ்ணராய புரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதி களின் 2020-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கரூர் மாவட்ட கலெக் டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் வெளி யிட்டார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டிய லின்படி 4 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 4,19,047 ஆண்கள், 4,44,758 பெண்கள், 60 இதர வாக்காளர்கள் என மொத்தம் 8,63,865 வாக்காளர் கள் பட்டியலில் இடம்பெற் றிருந்தனர். அதன் பிறகு தேர் தல் ஆணையம் அறிவுறுத்த லின் பேரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள் ளிட்ட திருத்த பணிகள் மேற் கொள்ளப்பட்டன. வாக் காளர் சுருக்கமுறை திருத்தத் தின்போது 4 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 8,812 ஆண்கள், 10,554 பெண்கள், இதர வாக்காளர்கள் 10 பேர் என மொத்தம் 19,376 வாக் காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டனர். மேலும் இறப்பு, வெளியிடங்களுக்கு சென்று குடிபுகுதல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி 4 தொகுதி களையும் சேர்த்து மொத்தம் 730 ஆண்கள், 897 பெண்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1,630 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்டத்தில் மொத்தம் 8,81,611 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான கரூர்- குளித்தலை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலு வலர் அலுவலகங்களான அர வக்குறிச்சி, கரூர், கிருஷ்ண ராயபுரம், குளித்தலை, மண் மங்கலம், கடவூர், புகளூர் வரு வாய் வட்டாட்சியர் அலு வலகங்கள் மற்றும் கரூர்- குளித்தலை நகராட்சி அலு வலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங் களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட் டுள்ளது. அதில் பெயர், புகைப்படம், இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங் களில் அனைத்து வேலை நாட்களிலும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத தகுதியான நபர்கள் படிவம் 6-ஐ அளித்திடலாம். இறந்துபோன, நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளரின் பெயரை நீக்கிட படிவம் 7-ஐ அளித்திடலாம்.

பெயர், வயது உள்ளிட்ட வற்றை மாற்றம் செய்திட படிவம் 8-ஐ அளித்திடலாம். ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு முகவரி மாறுதல் செய்திட படிவம் 8-ஐ அளித்திடலாம். மேலும் வாக்காளர் களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கூறும் வகையில் வாக்காளர் உதவி மையம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் ஏற்படுத்தப் பட்டுள் ளது. மேலும் தகவல் களை பெற கட்டணமில்லா 1950 என்கிற எண்ணிற்கு அழைக் கலாம். மேலும் www.nvsp.in என்கிற இணைய தளம் மூல மாகவும், oter help line என்கிற மொபைல் செயலி மூலமாக வும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொதுசேவை மையங்களிலும் மனுக்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாட்ட வருவாய் அதிகாரி தெரிவித் தார். இந்த கூட்டத்தில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் நகராட்சி ஆணையர் சுதா உள்பட அரசு அதி காரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story