கோவில்பட்டி, திருச்செந்தூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


கோவில்பட்டி, திருச்செந்தூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 15 Feb 2020 10:00 PM GMT (Updated: 15 Feb 2020 1:31 PM GMT)

கோவில்பட்டி, திருச்செந்தூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி, திருச்செந்தூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கோவில்பட்டி 

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவற்றை அனைத்து கட்சி பிரமுகர்கள் பெற்று கொண்டனர்.

தாசில்தார்கள் பாஸ்கரன் (கயத்தாறு), ராஜ்குமார் (விளாத்திகுளம்), அழகர் (எட்டயபுரம்), தேர்தல் துணை தாசில்தார்கள் வசந்த மல்லிகா, மாடசாமி, ஆறுமுகசாமி, ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 334 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 444 பேரும், திருநங்கைகள் 29 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 715 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 390 பேரும், திருநங்கைகள் 2 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 107 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 912 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 524 பேரும், திருநங்கைகள் 24 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 460 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்செந்தூர் 

இதேபோன்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் தனப்பிரியா வெளியிட்டார். தாசில்தார் ஞானராஜ், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜீவ் தாகூர், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கணேச பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 631 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 358 பேரும், திருநங்கைகள் 17 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 6 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story