மன்னார்குடியில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:15 AM IST (Updated: 17 Feb 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மன்னார்குடி, 

சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர்கள் பாஸ்கரவல்லி, மீனாம்பிகை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி, ஒன்றிய தலைவர் வனிதாதேவி, நகர தலைவர் மல்லிகா, பொருளாளர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு உயர்த்தப்பட்டுள்ள விலையை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

Next Story