ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம்கள் பேரணி


ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம்கள் பேரணி
x
தினத்தந்தி 17 Feb 2020 9:15 PM GMT (Updated: 17 Feb 2020 6:27 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரில் முஸ்லிம்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம், 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் மற்றும் சுற்று வட்டார ஜமாத் இயக்கங்கள் சார்பில் நேற்று மாலையில் பேட்மாநகரம் பள்ளிவாசல் தெருவில் நல்லிணக்க பேரணி தொடங்கியது.

ஏராளமான ஆண்களும், பெண்களும் தேசிய கொடியேந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று, பேட்மாநகரம் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அருகில் வந்தடைந்தனர்.

தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் த.மு.மு.க. மாநில துணை தலைவர் கோவை செய்யது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பேச்சாளர் முகம்மது உசேன், பேராசிரியர் முகம்மது முஸ்தபா, நாகர்கோவில் பள்ளிவாசல் தலைவர் சவுகத் அலி, அய்யா தர்மயுக வழி பேரவை தலைவர் பாலமுருகன், திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் பேசினர். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பேட்மாநகரில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story