சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2020 10:45 PM GMT (Updated: 18 Feb 2020 12:15 AM GMT)

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர், 

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் புஷ்பம் தலைமை தாங்கினார்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கோஷமிட்டனர்.

மாவட்ட பொருளாளர் சுசீலா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநகராட்சி தலைவர் மகேந்திரபூபதி, மாநில துணைத்தலைவர் பாக்கியம், மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் ஆகியோர் பேசினார்கள். முடிவில் வட்டக்கிளை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அவினாசி கிளை சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொருளாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.

அனைத்துத்துறை சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க கிளை செயலாளர் ரீட்டா பிச்சைமுத்து, சுசிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு வேலுசாமி தலைமை தாங்கினார். பூங்கோதை வரவேற்றார். போராட்டத்தின் போது ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். நிறைவாக பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

Next Story