குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சி துறை இயக்குனர் தலைமையில் நடந்தது


குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சி துறை இயக்குனர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 18 Feb 2020 5:56 AM IST (Updated: 18 Feb 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் தலைமையில் நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி, காைரக்கால் பகுதிகளில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட கழிவுகள், ஆபத்தான கழிவுகள், மின்னணு கழிவுகள் மேலாண்மை விதிகளை முறையாக செயல்படுத்துவது.

மத்திய அரசு அனைத்து கிராம மக்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே முறையான அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு அபராதம் விதித்து குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Next Story