சேலத்திற்கு வந்த கோவை-பெங்களூரு ரெயிலில் திடீர் புகை வந்ததால் பரபரப்பு
சேலத்திற்கு வந்த கோவை-பெங்களூரு ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரமங்கலம்,
கோவையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு தினமும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது 2 அடுக்கு கொண்ட ரெயில் ஆகும். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை 8 மணிக்கு அந்த ரெயில் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது ஊழியர்கள் ரெயில் பெட்டி மற்றும் ரெயில் சக்கரம் உள்ளிட்டவைகளை சோதனை செய்தனர்.
அப்போது 5-வது பெட்டியில் இருந்த ஒரு சக்கரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு வந்து அந்த பெட்டியில் இருந்த பயணிகளை வேறு பெட்டிக்கு மாற்றினர்.
பரபரப்பு
பின்னர் அந்த ஒரு பெட்டியை மட்டும் கழற்றினர். அந்த பெட்டியை வேறு ஒரு ரெயில் என்ஜின் மூலம் அங்கிருந்து வேறு நடைமேடைக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இதனால் சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு 9.30 மணிக்கு அந்த ரெயில் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் நேற்று காலை சேலம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story