பரங்கிப்பேட்டை அருகே, கிராம தலைவரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
பரங்கிப்பேட்டை அருகே கிராம தலைவரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா (வயது 54). கிராம தலைவர் ஆவார். அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பாலையா பணம் வசூலித்து கொண்டிருந்தார்.
இதற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் (24) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பாலையாவுக்கும், சதீசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சதீஷ், தான் வைத்திருந்த கத்தியால் பாலையாவை சரமாரியாக வெட்டினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பாலையாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அவர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story