மாவட்ட செய்திகள்

வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் + "||" + Metro Rail Project on 5 routes in Coimbatore in conjunction with the bus stand at Vellalaur

வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்

வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்
வெள்ளலூரில் அமைய உள்ள புதிய பஸ்நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தி கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு அறிக்கை தயாராகி வருகிறது.
மெட்ரோ ரெயில் திட்டம்
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னை மெட்ரோ ரெயில்வே லிமிடெட்(சி.எம்.ஆர்.எல்.) கோவையில் எந்த வழிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது என்று ஆய்வு செய்து வருகிறது.

இதன்படி 5 பிரிவுகளாக 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

5 வழித்தடங்கள்
அதன்படி 5 வழித்தடங்கள் விவரம் வருமாறு:-

1. உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 24 கிலோ மீட்டர் தூரம். 2. உக்கடத்தில் இருந்து காரமடை அருகே உள்ள பிளிச்சிவரை 24 கிலோ மீட்டர் தூரம். 3. தண்ணீர் பந்தல், தடாகம் ரோடு, காரணம்பேட்டைவரை 42 கிலோமீட்டர் தூரம். 4.காருண்யா நகர் முதல் கணேஷ்புரம் வரை 44 கிலோ மீட்டர் தூரம். 5. வெள்ளலூரில் அமைய உள்ள புதிய பஸ்நிலையம் முதல் உக்கடம் வரை 11 கிலோ மீட்டர் தூரம்.

இந்த 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது? என்று திட்ட அறிக்கை தயார் ஆகி வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்கள்
பெரியநாயக்கன்பாளையம் பிரஸ்காலனி, பீளமேடு சின்னியம்பாளையம் ஆகிய 2 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில்நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.