காஞ்சீபுரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்


காஞ்சீபுரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 2:30 AM IST (Updated: 20 Feb 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மேற்படி கூட்டத்தின்போது, பொது வினியோகத் திட்டம், போக்குவரத்து துறை, உணவு பாதுகாப்பு மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் கீழ் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நுகர்வோர் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நுகர்வோர் குறித்தான குறைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Next Story