குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி முஸ்லிம்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி முஸ்லிம்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 5:00 AM IST (Updated: 20 Feb 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டையில் முஸ்லிம்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவித்தன. இதேபோல புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக முஸ்லிம் அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று காலை முதலே மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தடுப்பு கட்டைகள் வைக்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து முஸ்லிம்கள் பலர் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா முன்பு கூடி நின்றனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பியவாறு கையில் பதாகைகளுடன் சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டானாவில் வந்த போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று, தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Next Story