குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: முஸ்லிம் பெண்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கோட்டையில் முஸ்லிம் பெண்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
சேலம்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் சேலம் கோட்டை பால் தெருவில் கடந்த 17-ந் தேதி முஸ்லிம் பெண்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நேற்று முன்தினம் 2-வது நாளாக தொடர்ந்து விடிய, விடிய நடைபெற்றது. இந்தநிலையில் அவர்களுடைய போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
கைவிட மாட்டோம்
அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் கோஷமிட்டனர். இதனிடையே தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா நேற்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என முஸ்லிம் பெண்கள் தெரிவித்தனர். போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story