வெங்கையாநாயுடு 26-ந்தேதி வருகை அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை


வெங்கையாநாயுடு 26-ந்தேதி வருகை அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 19 Feb 2020 11:58 PM GMT (Updated: 19 Feb 2020 11:58 PM GMT)

புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு 26-ந்தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதையொட்டி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவி களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்குகிறார்.

இதையொட்டி காபினெட் அறையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அன்பரசு, சுந்தரேசன், புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், துணை கலெக்டர் சுதாகர், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினய குமார், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி, போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடு

அப்போது, புதுவை வரும் துணை ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, அவர் செல்லும் வழியில் வரவேற்பு வளைவுகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Next Story