கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2020 5:00 AM IST (Updated: 20 Feb 2020 10:09 PM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாகையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மேகலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லட்சுமி பிரியா, மாநில குழு உறுப்பினர் பாப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிவற்றை திரும்ப பெறவேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரிவைத்தனர். இதில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story