இண்டூர் அருகே ‘போர்ட்டிகோ’ இடிந்து தொழிலாளி பலி


இண்டூர் அருகே ‘போர்ட்டிகோ’ இடிந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-21T02:44:28+05:30)

இண்டூர் அருகே ‘போர்ட்டிகோ’ இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே நத்தஅள்ளியை சேர்ந்த காளியப்பன் மகன் சக்திவேல் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டின் முன்பக்கமுள்ள போர்ட்டிகோவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதனை சக்திவேல் சரிசெய்து சீரமைக்க முடிவு செய்தார்.

இதற்காக நேற்று மதியம் சக்திவேல் போர்ட்டிகோவில் இரும்பு கம்பியை பயன்படுத்தி சீரமைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அது இடிந்து விழுந்தது.

சாவு

இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி சக்திவேல் பலத்த காயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான சக்திவேலுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். போர்ட்டிகோ இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story