முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு: தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 27 பேர் மீது வழக்கு


முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு: தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 27 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-21T04:27:45+05:30)

முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஐகோர்ட்டு தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நகர பொறுப்பாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகர தலைவர் முனியாண்டி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் சையது இஸ்மாயில் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story