கோவில் விழாவில் நகை திருடிய இளம்பெண் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
கோவில்விழாவில்பெண்களிடம் நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில், காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 6-ந் தேதி பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் சாமி கும்பிட வந்திருந்த 4 பெண்களிடம் தங்க சங்கிலியை மர்ம கும்பல் பறித்துச்சென்றது.
இதுகுறித்து லாஸ்பேட்டை, பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு நகைகளை பறித்துச்சென்ற மர்ம கும்பலை தேடிவந்தனர்.
மர்மநபர்கள் பற்றி துப்பு துலங்குவதற்காக கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு கும்பலை போலீசார் அடையாளம் கண்டனர்.
ஜிப்மர் வளாகத்தில் சுற்றிவளைப்பு
இந்த வழக்கில் திருச்சி சாமியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித் என்பவரின் மனைவியான பாண்டீஸ்வரி (வயது 20), மதி (38) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் புதுவை கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த பாண்டீஸ்வரி, மதியை போலீசார் சுற்றிவளைத்தனர். இதில் பாண்டீஸ்வரி சிக்கினார். மதி தப்பி ஓடிவிட்டார்.
கைது செய்யப்பட்ட பாண்டீஸ்வரியிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாராட்டு
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, ஜாகீர் உசேன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜீ, போலீஸ்காரர்கள் ஹரிஹரன், கோவிந்தன், ராஜவேல், ஜெயக்குமார், சசிதரன் ஆகியோரை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஸ் பாராட்டினார்.

Related Tags :
Next Story