வேலூர் நகரில் நாளை மின்நிறுத்தம்
திருவலம் துணைமின்நிலையத்தில் வெஸ்டன் மின்தொகுப்பில் உள்ள காற்று திறப்பானில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் அவசர பணி நடக்கிறது.
வேலூர்,
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலூர், சத்துவாச்சாரி துணை மின்நிலையங்களிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் சத்துவாச்சாரி பகுதி–1 முதல் பகுதி–5 வரை, விஜயராகவபுரம், சி.எம்.சி.காலனி, கலெக்டர் அலுவலக வளாகம், தென்றல்நகர், ராகவேந்திராநகர், குறிஞ்சிநகர், முல்லைநகர், சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, மூலைக்கொல்லை, புதிய, பழைய பஸ்நிலையங்கள், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story