மாவட்ட செய்திகள்

ஊட்டியில், கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது + "||" + At Ooty, Who sold cannabis Arrested in Thug Act

ஊட்டியில், கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

ஊட்டியில், கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
ஊட்டியில் கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஊட்டி,

ஊட்டி நகரில் கடந்த மாதம் 20-ந் தேதி ஒருவர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். போலீசார் சிவக்குமாரை ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தோடும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் உத்தரவையடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த சிவக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.