குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:08 PM GMT (Updated: 21 Feb 2020 10:08 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த கோரியும் தஞ்சை ரெயிலடியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள அக்தர் மகல்லா ஜமாத் பள்ளிவாசல் முன்பு நேற்று 7-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story