பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணை நாடு கடத்த வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணை நாடு கடத்த வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் தேசபக்தி இருக்க வேண்டும். நாட்டுக்கு எதிராகவும், மற்ற நாட்டுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமுல்யா லியோனா வரலாறு என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடும் அவரை போன்றவர்களை நாடு கடத்த வேண்டும். இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண்ணின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
பெங்களூரு நகர காங்கிரஸ் சார்பில் அமுல்யா லியோனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த பெண்ணுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதையும் போலீசார் கண்டறிய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story