சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என காரணம் கூறி போராட்டங்களுக்கு போலீஸ் அனுமதி மறுக்க முடியாது ஐகோர்ட்டு கருத்து


சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என காரணம் கூறி   போராட்டங்களுக்கு போலீஸ் அனுமதி மறுக்க முடியாது   ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 22 Feb 2020 5:12 AM IST (Updated: 22 Feb 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என காரணம் கூறி போராட்டங்களுக்கு போலீஸ் அனுமதி மறுக்க முடியாது என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

மும்பை,

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகம் அருகில் உள்ள ரெசிம்பாக் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) பீம் ஆர்மி என்ற அமைப்பு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து அந்த அமைப்பு சார்பில் நாக்பூர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றுமுன்தினம் இந்த மனு மீது நீதிபதிகள் சுனில் சுக்ரே மற்றும் மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு முரணான கொள்கையை கடைபிடித்து வரும் பீம் ஆர்மி அமைப்பின் போராட்டத்துக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐகோர்ட்டு அனுமதி

இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், இதுபோன்ற பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் சமூக பாதுகாப்பு அம்சமாக விளங்குகின்றன. அடக்குமுறை மிகவும் ஆபத்தானது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகக்கூடும் என்ற காரணத்திற்காக மட்டுமே போலீசார் அனுமதி மறுக்க முடியாது. இதுதொடர்பாக எந்தவொரு விசாரணையோ அல்லது உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்யவோ போலீசார் தவறிவிட்டனர். போராட்டத்துக்கு அனுமதி வழங்காதது அடிப்படை உரிமைகளை மறுப்பதை குறிக்கும்.கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

நேற்று இந்த மனு மீண் டும் விசாரணைக்கு வந்தபோது, பீம் ஆர்மி அமைப்பு போராட்டம் நடத்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

Next Story