கடன் தருவதாக 9 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி - சினிமா இயக்குனர் கைது
கடன் தருவதாக 9 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்ட சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை அந்தேரி வீர்தேசாய் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சினிமா இயக்குனர் அஜய் யாதவ் (வயது54). இவர் சஸ்பென்ஸ், சாக்சி உள்ளிட்ட 6 இந்தி படங்களை இயக்கி, தயாரித்து உள்ளார். மேலும் இவர் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இவர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் லம்பாவிற்கு ரூ.200 கோடி கடன் தருவதாக கூறியுள்ளார். மேலும் அதற்காக ரூ.20 லட்சத்தை சேவை கட்டணமாக வாங்கி உள்ளார். ஆனால் அவர் கடன் கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய ரூ.20 லட்சத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார்.
இதுகுறித்து டெல்லி தொழில் அதிபர் மும்பை போலீசில் புகார் அளித்தார். மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இயக்குனர் அஜய் யாதவை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கடன் தருவதாக ரூ.9 பேரிடம் ரூ.1¼ கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் அஜய் யாதவிடம் இருந்து ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story