மாவட்ட செய்திகள்

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு + "||" + Suicide by drinking poisonous poison Drinking Because of his wife condemnation

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு
பொதட்டூர்பேட்டை அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட் டூர்பேட்டை அருகே உள்ள சின்னமுடிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 45). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் ஜானகி (40). இவர்களுக்கு வைஷ்ணவி (15) என்ற மகளும், மூர்த்தி (13) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஜானகிராமன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.


இதைக்கண்டு வேதனை அடைந்த ஜானகி, ஜானகிராமனை குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜானகிராமன் நேற்று வயல்வெளிக்கு சென்று, அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவர் மயங்கி கிடந்ததை கண்டு அங்குள்ளவர்கள் அவரை மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜானகிராமன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (சிறப்பு) ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தலையில் கல்லை போட்டு மனைவி-மகன் படுகொலை கள்ளக்காதலனுடன் பேசியதால் கொத்தனார் வெறிச்செயல்
திருச்சி அருகே கள்ளக்காதலனுடன் பேசியதால் மனைவி-மகனின் தலையில் கல்லை போட்டு கொத்தனார் படுகொலை செய்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் சாவு
புதுவையில் அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.