ஆணாக மாறியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் பாதுகாப்பு கேட்டு மதுரை கோர்ட்டில் மனு
ஆணாக மாறியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் பாதுகாப்பு கேட்டு மதுரை கோர்ட்டில் மனு.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த தி.கூடலூரை சேர்ந்தவர் பவித்ரா (வயது 21).
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஷ்வந்த். இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். இவர்கள் திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்தனர். பின்னர் மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் பவித்ரா புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், விஷ்வந்தும் கல்லூரியில் படிக்கும் போதே பழகினோம். பின்னர் எங்களது பழக்கம் காதலாக மாறியது. விஷ்வந்த் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் என்று தெரிந்த உடன், எங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே உரிய பாதுகாப்பை அளிக்கவும், உரிய நீதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து தாங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க இயலாது என்று சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவானது, மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story