தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய தொலைபேசி ஊழியர் சம்மேளன நிர்வாகி மணி, கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாலமுரளி,வெங்கட்ராகவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4 ஜி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பளத்தை விரைவாக வழங்க வேண்டும்.
சம்பள பிடித்த தொகைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அவ்வப்போது அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பணப்பலன்கள்
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றங்கள் வழங்கப்படுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இ்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொலைபேசி நிலையங்களில் நேற்று வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story