கள்ளக்குறிச்சி பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா


கள்ளக்குறிச்சி பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 25 Feb 2020 4:31 AM IST (Updated: 25 Feb 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சுங்கச்சாவடி அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவியும் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் அரசு, அய்யப்பா, ராஜேந்திரன், பழனி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கதிர்.தண்டபாணி, எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ரங்கன், முன்னாள் ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஞானவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், மருத்துவரணி மாவட்ட பொருளாளர் குமரேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாணவரணி செயலாளர் சீனுவாசன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மணம்பூண்டி

திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் துரை, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் கலைமணி, கிளை செயலாளர் சீனுவாசன், ஊராட்சி செயலாளர் பூவராகவன், அவைத்தலைவர் முருகன், மேலவை பிரதிநிதி சங்கரன், மாவட்ட பிரதிநிதிகள் மகாராஜன், தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் கிரு‌‌ஷ்ணன், அய்யப்பன், பூபதி, ம.க.முருகன், பழனி, நவீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் பார்த்திபன் நன்றி கூறினார்.

ரி‌ஷிவந்தியம்

ரி‌ஷிவந்தியம் ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமையில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, குணசேகரன், செல்லப்பன்,கதிர்.சுப்புராயன், விஜயவர்மன், மண்ணாங்கட்டி, சிவா, முனியப்பன், ஆறுமுகம், பெருமாள், பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகண்டை கூட்டுரோடு

இதேபோல் ரி‌ஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பகண்டை கூட்டுரோட்டில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சந்திரசேகரன், தேவசந்திரன், சண்முகம், பாலமுருகன், வைத்தியநாதன், சின்னராஜ், மணிகண்டன், மாரிமுத்து, அருணாச்சலம், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சூலாங்குறிச்சி, ரி‌ஷிவந்தியம், கடுவனூர், முனிவாழை உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மைக்கேல்புரத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் ஒன்றிய செயலாளர் அரசு தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குதந்தை மகிமை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பவுல்ராஜ், வனக்குழு தலைவர் எ.பவுல்ராஜ், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சுந்தரம், நிர்வாகிகள் ஜோசப், மார்ட்டீன், குழந்தையேசு, சின்னப்பன், செல்வராசு, ஜான்பீட்டர், மரியசூசை, அண்ணாமலை, பன்னீர்செல்வம், அர்ச்சுணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூர், அ.பாண்டலம், தேவபாண்டலம், உலகலப்பாடி, உலகுடையாம்பட்டு, மணலூர், மூங்கில்துறைப்பட்டு, புதுப்பட்டு ஆகிய பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story