கால்நடை பண்ணையில் தீ; 6 பசுங்கன்றுகள்-கோழிகள் கருகி சாவு


கால்நடை பண்ணையில் தீ; 6 பசுங்கன்றுகள்-கோழிகள் கருகி சாவு
x
தினத்தந்தி 26 Feb 2020 3:00 AM IST (Updated: 25 Feb 2020 9:57 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளனூர் அருகே கால்நடை பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசுங்கன்றுகள், கோழிகள் கருகி செத்தன.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் அருகே ராஜகுளத்தூரில் எட்வின் என்பவருக்கு சொந்தமான கால்நடை பண்னை உள்ளது. இந்த பண்ணையில் பசுக்கள் மற்றும் கோழிகளை அவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கால்நடைப் பண்ணையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. 

இதுகுறித்து அன்னவாசல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர். ஆனால் இருப்பினும் கால்நடை பண்ணை கொட்டகைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் அந்த பண்ணையில் இருந்த 6 பசுங்கன்றுகள் உடல் கருகி செத்தது. மேலும் தீ விபத்தில் கால்நடை பண்ணையில் அடைக்கப் பட்டிருந்த கோழிகளும் எரிந்து கருகி சாம்ப லானது.

மேலும் 2 பசுக்கள் மற்றும் 2 கன்றுகள் உடல் கருகி காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் காட்சி காண்போருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

Next Story