இன்சூரன்ஸ் மோசடி வழக்கு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 6 பேருக்கு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலத்தில் இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா ஜோசப் குணாநிதி (வயது 48). இவர் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள ராஜகணபதி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த வாகனத்தை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த மணி (42) ஓட்டினார்.
இதில் காயமடைந்த ராஜா ஜோசப் குணாநிதி சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள கமலா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
6 பேருக்கு சிறை
இதைத்தொடர்ந்து ரூ.2 லட்சம் இழப்பீடு கேட்டு ராஜா ஜோசப் குணாநிதி சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், ஆஸ்பத்திரி பதிவேட்டில் விபத்து நேரத்தை திருத்தியும், இன்சூரன்ஸ் பெற மோசடி செய்ய முயன்றதும், இதற்கு சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ராஜா ஜோசப் குணாநிதி, வாகனத்தின் டிரைவர் மணி, வாகனத்தின் உரிமையாளர் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி மல்லிகா (54), நாமக்கல் பரமத்தி ரோடு நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மண்டல மேலாளரான மதுரை பொற்குடம் குடியிருப்பு ஸ்டேட் வங்கி பகுதியை சேர்ந்த மோகன் (54), சேலம் கமலா ஆஸ்பத்திரி நிர்வாக பங்குதாரர் டாக்டர் ராஜகோபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் கண்ணையன் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story