மாவட்ட செய்திகள்

தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி + "||" + Engineer killed after falling out of building at Taramangalam

தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி

தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள பெரியகாடம்பட்டி மங்கானூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் முருகநாதன் (வயது 38), சிவில் என்ஜினீயர்.

இவர் தாரமங்கலம் மாதாகோவில் பகுதியில் மல்லிகா என்பவருக்கு வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அந்த வீட்டு கட்டிடத்தில் ஏறி பணிகள் எந்தளவு நடைபெற்றுள்ளது என்பதை பார்வையிட சென்றார்.


அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து தவறிவிழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார்.

சாவு

பின்னர் சுயநினைவின்றி கிடந்த முருகநாதனை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முருகநாதனுக்கு, ரேணுகாதேவி (34) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. செந்துறையில் மழையால் மின்கசிவு: பெற்றோரை இழந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி
மழையால் மின்கசிவு ஏற்பட்டதில் செந்துறையில் பெற்றோரை இழந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
2. மினி சரக்கு வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 3 வயது குழந்தை பலி
மினி சரக்கு வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
3. 50 ஆண்டுகளாக குறைந்த செலவில் மருத்துவம் பார்த்தார் கொரோனாவுக்கு டாக்டர் பலி
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 50 ஆண்டு காலமாக குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த டாக்டர், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானார்.
4. அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
5. காஷ்மீர் லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி கோவில்பட்டி ராணுவ வீரர் பலி
காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக பலியானார்.